Search This Blog

Tuesday, October 1, 2013

நேர்மையான மரம்வெட்டி

முன்னொரு காலத்தில் நேர்மையான மரம்வெட்டி ஒருவன் இருந்தான்.  அவன் வேலைக்காக ஒரு பண்ணையாரிடம் சென்றான். அந்த பண்ணையாரோ மரம்வெட்டியை  அவருடைய தோட்டத்தினை காட்டி "இதோ எந்த இடங்களில் உள்ள மரங்களை வெட்டு" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

முதல் நாளில் 18 மரங்களை வெட்டினான் அந்த மரம்வெட்டி. அதனை கண்ட பண்ணையார். நீ நேர்மையோடும், கடினமாகவும் உழைக்கின்றாய்  என்று பாராட்டி சென்றார்.

மறுநாள் 15 மரங்களை வெட்டினான்.

மூன்றாம் நாள் 10 மரங்களை வெட்டினான்.

நாட்கள் செல்ல செல்ல வெட்டும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே சென்றது.

மறுமுறை பண்ணையார் அந்த தோட்டத்திற்கு வரும்போது அவரிடம் சென்ற மரம்வெட்டி "கடினமாக  தான் தினமும் உழைக்கின்றேன்   ஆயினும் என்னுடைய உடல் சக்தியை இழந்து விட்டது போலும், மனம் வருந்துகின்றேன் ஐயா" என்றான்.

இனிமேல் இங்கு வேலை செய்யும் தகுதியை இழந்துவிட்டேன் நான் செல்கின்றேன் என்றான் மரம் வெட்டி.

அவனது கோடாரியை வாங்கி பார்த்த பண்ணையார் "கடைசியாக எப்பொழுது தீட்டினாய்" என்று கேட்க.

"கோடரி தீட்டுறதா எங்க ஐயா நேரம், அந்த நேரத்துல ஒரு மரம் வெட்டிடலம்னு  தான் தீட்டளை" என்றான்

Author: Stephen Covey
From: 7 Habits of Highly Effective People



அந்த மரம் வெட்டியை  போன்று தான் நாமும். தகுந்த விசயங்களுக்கு நேரம் ஒதுக்கி செயல் படாமல் வாழ்கின்றோம். 

நேரமில்லை என்று ஃபர்லான தொளுகையோடும் இபதத்துக்களோடும் நிறுத்திக்கொண்டு நிம்மதியடைகின்றோம்.



No comments:

Post a Comment