
உலகெங்கும் பள்ளிகள் எல்லாம் பழைய செங்கல்லில்
பாராளுமன்றங்களோ பளபளக்கும் பளிங்கு கல்லில்
பள்ளி கட்டிடங்கள் வயதிலும் கண்டதில்லை வர்ணம் இங்கே
வருடம் தவறாமல் புதுமைகள் அங்கே
விரிசல் கண்டு அஞ்சியதில்லை குழந்தைகள் இங்கே
குளிர் காற்று இல்லை என்று குறை கூறும் அரசியல் அங்கே
பாம்பு தேள் விஷ பூச்சிகளை கண்டு புன்னகை செய்யும் குழந்தைகள் இங்கே
கொசு அழிக்க கொடுத்த காசு ஊழல் என்று குற்றம் சாட்டுபவர்கள் அங்கே
சிறு சிறுவர்களின் விளையாட்டு சண்டைகள் இங்கே
வேஷ்டி சேலை உருவி மைக்கால் மண்டை உடைக்கும் அரக்க சண்டைகள் அங்கே
உயிர் போகும் என்று தெரியாமல் உரக்க சிரிப்பவர்கள் இங்கே
போகாத உயிர்க்காக போலீஸ் காவல் அங்கே
ஒப்பிட்டு பார்க்க கூட தகுதி இல்லை இங்கும் அங்கும்
ஒப்பிட்டு எழுதி விட்டேன் மன்னித்து விடுங்கள் என்னை
nee iru pudhu vadivam pannitu iruka.. nalla iruku
ReplyDelete